வார்த்தைகள் இல்லை.. என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏன் கண்ணீர் மல்க நின்றேன்? இந்த நாள் வரை குழந்தை போலவே என் கண்ணுக்கு தெரிந்த என் அன்பு மகள் ஒரு அழகிய பெண்ணாக தோற்றமளித்ததா? நான்கே வயது நிரம்பிய என் மகள் இன்று பருவ பெண் போன்று காட்சியளித்தாளே, அதனால் தான் சந்தோஷத்தில் கண் கலங்கியதா? பரதத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு எனக்கு. அந்த பரதத்தை, நானே எதிர்பாராத தருணத்தில், அவள் ஆடினாளே அதனாலா? திருத்தமாகவும் நாயகி போன்றும் அவள் ஆடாத தருணத்திலும், அவளாக அவளுக்கு தெரிந்ததை ஆடினாலும், எதனால் இப்படி வியந்தேன்?
கருவுற்ற போது அடைந்த மகிழ்ச்சி, அவள் பிறந்த போது அடைந்த சந்தோஷம், அவள் நடந்த போது கிடைத்த இன்பம், அவள் மழலை சொற்களை முதன்முதலில் கேட்ட போது கிடைத்த உற்சாகம், என்று எத்தனையோ தருணங்கள் கடந்து சென்றிருந்தாலும், இது வரை தொடர்ந்து மகிழ்ச்சியில் அழுததில்லை நான்.
இப்பொழுதே இப்படி என்றால், இன்னும் அவளை பருவப்பெண்ணாகவும், திருமணக்கோலத்திலும் கண்டால் எப்படி நெகிழ்வேனோ!! இப்பொழுது புரிகிறது.. தாய்மார்கள் தத்தம் மகள்களின் திருமணத்தன்று ஏன் கண்ணீர் சிந்துகிறார்கள் என்று!!
அது சரி.. மகிழ வைக்கவும், நெகிழ வைக்கவும் தானே குழந்தைகள்!!

