விளம்பர சீர்கேடுகள்

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் டிவி on செய்துவிட்டு சமையல் வேலையை ஆரம்பித்தேன். சன் மியூசிக்இல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாடல்களை கேட்ட வண்ணம் காய்கறி வெட்டி கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளையின் போது ஒரு விளம்பரத்தில் வந்த dialogue காதில் விழுந்தது. அதில் ஒரு பெண்மணி தன் அக்காவிடம் “அக்கா, இதோ பார் நரை முடி. என் life ஏ போச்சு” என்று கூறுவதாக டைரக்டர் எழுதியிருக்கிறார். அந்த விளம்பரத்தை பல முறை பார்த்திருக்கிறேன். அதை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாக இருக்கின்றது. மனிதர்களுக்கு எது எதற்கெல்லாம் life ஏ போனதாக கருதுவதென விவஸ்தை இல்லாமல் போய்விட்டதே என்று கோபம் தான் வருகின்றது. எவ்வளவோ மக்கள் உண்ண உணவில்லாமலும், உடுத்த உடை இல்லாமலும், அடுத்த நிமிடம் எங்கே தங்குவதென்று கூட தெரியாமல் platform இலும், தெருவிலும் வாழ்ந்து கொண்டிருகின்றனர். நம்மவர் என்னவென்றால் நரை முடியாம் நரை முடி. ஒன்றுக்குமே பயன் படாத முடிக்கு இந்த பாடு.

அடுத்த விளம்பரத்தில் என்னவென்றால், ஒரு பையனுக்கு தன் girl friend முன் பிற பெண்களை எப்படி look விட வேண்டும் என்று கற்று கொடுக்கிறார்கள். கேட்பதற்கே கேவலமாக இருக்கின்றது.

ஒரு விளம்பரத்தில் தலைமுடியை கட்டி ஒரு லாரிஐயே இழுத்து செல்வது போல காட்டியிருக்கிறார்கள். உண்மையிலேயே அது சாத்தியமானதா? அப்படி இழுக்க முயன்றால் தலையில் முடி இல்லை தலையே தனியாக கழன்றுவிடாதா? மஞ்சளாக இருக்கும் ஒரு சட்டையை வெள்ள வெளேரென்று மாற்றிவிடுவது போல மற்றொரு சோப்பு விளம்பரம். போதாத குறைக்கு எதை கேட்டாலும் “இப்படி இல்லாவிட்டால் பணம் வாபஸ்” என்று வேற விளம்பரபடுத்துகிறார்கள். கீழே எறும்பு அளவிற்கு “Terms and conditions apply” வேறு.

இதெல்லாம் கூட சகித்துகொள்ளலாம். இன்னும் சில விளம்பரங்கள் அறுவருக்க தக்க இருக்கின்றன. பல் துலக்க பயன்படும் பேஸ்ட்க்கு என்ன ஆபாசம் வேண்டியிருக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. உலகில் எவனும் தன் பல் ஆரோக்யத்திற்கு பல் துலக்குவதில்லை போல. எந்த விளபரத்தை பற்றி கூறுகிறேன் என்று எல்லோருக்கும் புரியுமென நம்புகிறேன். இப்படி சோப்பு, பேஸ்ட் இலிருந்து body spray வரைக்கும் எல்லாவற்றிலும் ஆபாசம். எங்கு சென்று கொண்டிருக்கிறது நம் கலாச்சாரம்? எல்லாமே பேஷன் என்று மாறிவிட்டது. இதை பற்றி பேசினால் “நீ பழமைவாதி” என்பார்கள். இருக்கட்டுமே. இப்படி இருப்பதை விட பழமைவாதியாக இருப்பதே பெருமையாக உள்ளது.

உலகில் கவலை பட வேண்டிய விஷயங்களுக்கு கவலை படாமல் இப்படி முடிக்கும்,  girl friendsக்கும் கவலை படும் நம்மவரை பார்த்தால் நம் நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என்று வருத்தமாக உள்ளது. சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

1 thought on “விளம்பர சீர்கேடுகள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top