இல்லாள்

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

be-yourself-1

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். எதை கொண்டு ஆள்பவள் என கேட்டால், பாசம் என்று பதில் கூறலாம். ஆனால், இக்காலத்திலோ பலர் தான் நினைத்ததை சாதித்தும், அனைவரும் தனக்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். சில குடும்பங்களில் மனைவி செய்வதும், சொல்வதும் எல்லாம் சரி என்றெண்ணி கணவர்கள், பிறரை உதாசினப்படுத்துவதையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். சில குடும்பங்களில், மனைவி சரியாக எடுத்து சொன்னாலும், தான் செய்வது தான் சரி என்று கணவனே தன் மனைவியை பிறரிடம் விட்டு கொடுக்கிறான். எதனால் இவ்வாறு பல வேறுபாடுகள்? எல்லோரும் மனிதர்கள் தானே!

மனிதர்கள் எல்லோரும் தவறு செய்ய கூடும். எல்லோரும் எல்லா நேரங்களிலும் சரியாகவே இருந்து விட முடியாது. கணவன், மனைவி என்றிருப்பவர்களுக்குள் முதலில் நல்ல நட்பு உண்டாக வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டும். அதே போல் அவர்களில் ஒருவர், தவறு செய்யும் போது, மற்றொருவர் அதை எடுத்துக்கூறி உணர வைக்க வேண்டும். இதை செய்ய தவறினால், அது ஒரு குருட்டுத்தனமான உறவாகவே இருந்து விடும்.

மேலும், மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும். மறைத்து பேசுவதும், மனதில் சினம் கொண்டு அதை வளர்த்துக்கொண்டே போவதும் நல்லதல்ல. கணவன் கூறுவதெல்லாம் சரி என்று தலையாட்டும் மனைவியெல்லம் வாசுகியும் அல்ல; கணவனிடம் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி பேசுபவள் எல்லாம், திமிர் பிடித்தவளும் அல்ல.

pic4

இன்னும் சிலர், கணவன் முன்பு ஒரு முகத்துடனும், பிறர் முன்பு வேறு முகத்துடனும் இருப்பர். கணவன் என்பவர் நம்மில் பாதி என்று கூறுகின்றோம். அவ்வாறிருக்க அவர்களிடம் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு நடித்துக்கொண்டிருக்க முடியுமா? அப்படியே செய்தாலும் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம் தானே? உமையாளே அந்த மகேஸ்வரனிடம் சரி சமமாக உரிமைக்குரல் கொடுத்தாளே ஒழிய, சிரித்து பாசாங்கு செய்யவில்லை. “எங்களுக்குள் கருத்து வேறுபாடே வந்ததில்லை” என்று கூறுபவர்களில், ஒருவர் கண்டிப்பாக இரு முகம் கொண்டவராகவே இருக்கின்றனர். மனிதர்கள் என்றால் சில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

agathin-alaku

முட்கள் உள்ள ரோஜாவை, அழகைப்பார்த்து இனியது என்றும், இனிய பலாவை அதன் உருவத்தை பார்த்து, அது கசப்பு என்றும் சொல்லவா முடியும்? அப்படி சொல்பவனை, பைத்தியக்காரன் என்கிறோம். ஆனால், மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவரை “அடங்காப் பிடாரி” என்றும், மனதில் ஆயிரம் பகையை வைத்துக் கொண்டு, இனிக்க பேசுபவரை “மிகச்சிறந்த இல்லாள்” என்று கூறும் நம்மவர் எத்தனை எத்தனை பைத்தியங்களுக்கு சமம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top