தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!!

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

ஒவ்வொரு குடும்பத்திலும் “ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால்” அடுத்தது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதுவே முதலாவது குழந்தை ஆணாக பிறந்து விட்டால், இரண்டாவது குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். அது ஏனென்று எனக்கு புரியவில்லை. இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தால், பெரியவர்கள் ஆனவுடன், ஒரு distance ஓடுதான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சொத்து சண்டை, குடும்ப சண்டை என்று பிரிந்து விடுகிறார்கள். சகோதரன், சகோதரியாக இருப்பவர்கள், திருமணம் ஆனவுடன் “தன் குடும்பம், தன் குழந்தை” என்று மாறி விடுகிறார்கள். ஆனால் சகோதரிகளாக இருப்பவர்களே “அம்மா வீட்டுக்கு ஒன்றாக செல்வது, ஒருவர் குழந்தைகளை ஒருவர் தன் குழந்தை போல வளர்ப்பது” என்றே இருக்கிறார்கள். அப்படி என்றால் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் நல்லது தானே!!

என் அக்கா மீனா தேவி – முதல் முறையாக அவளை அக்கா என்று இங்கு தான் குறிப்பிடுகிறேன். வீட்டில் மீனு என்று தான் அழைப்போம். அவளும் நானும், “தண்ணீருக்கு குழாய்யடி சண்டை”  எங்களிடம் தோற்று போவது அளவிற்கு சண்டை போடுவோம் சிறு வயதில். 4 வருடங்கள் வித்தியாசம் என்றாலும் அவளை மரியாதை உடன் அழைத்ததில்லை நான். அவளுடைய பொழுது போக்கு என்னை பயமுறுத்துவது, அடிப்பது. என்னுடைய பொழுது போக்கு அவளை என் அம்மாவிடம் மாட்டி விடுவது, என்றே இருந்தோம்.

என்று இப்படி தோழிகளாக மாறினோம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. இருவரும் அண்ணன், தம்பிகளை திருமணம் செய்து ஒரே குடும்பத்தில் இருக்கிறோம். நான் Bangalore இலும் அவள் chennai இலும்  இருந்தாலும், தூரம் எங்களை ஒரு போதும் பிரித்ததில்லை. அவள் எல்லா சனி ஞாயிறுகளுக்கும் அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். நான் எப்பொழுது வருவேன் என்று கேட்டு கொண்டே இருப்பாள். என் Harshu குட்டியை தன் மகளென்றே பார்ப்பாள். என் அக்கா குழந்தை Rithu பிறந்த போது, என் Harshu 8 மாத குழந்தை. என் அக்கா hospital இலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், என் அக்காவை ஒரு வாரமாக பார்க்காத Harshu , அவளை கட்டி அணைத்து, முத்த மழை பெய்தாள். என் அக்கா, ஆனந்த கண்ணீருடன், “Gullu , நீ தான்டி என் முதல் குழந்தை என்று கூறி முத்தமிட்டாள். இன்றும் அதை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது. Harshu  பெரிம்மா செல்லம். அந்த அளவிற்கு அன்பும் பாசமும் காட்டுகிறாள் என் அக்கா.

என் அம்மா, என் அக்கா மற்றும் நான் என்றுமே அம்மா-மகள்களாக இருந்ததில்லை. உற்ற தோழிகளாகவே இருக்கிறோம். நான் இன்றும் என் அம்மாவிடம் தினமும் ஒரு மணி நேரம் பேசுவேன். பல தோழிகள் என்னிடம் கேட்கிறார்கள், ” அப்படி என்ன அம்மாவிடம் பேசுவாய்” என்று. அதெல்லாம் எனக்கு தெரியாது. நினைத்து பார்த்ததும் இல்லை. என் நாள் துவங்கியது முதல் என் நாள் முடிவடையும் வரை அத்தனையும் என் அம்மாவிடம் கூறுவேன். அதன் பிறகே எனக்கு தூக்கம் வரும்.

Harshu பிறந்தபோது நிறைய பேர் கூறினார்கள், “பையனாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்று. அதே வார்த்தைகளை Rithu பிறந்த போதும் கூறினார்கள். ஆனால் Rithu பிறந்த அன்று எனக்கு இருந்த பெரிய சந்தோஷம் “இன்னொரு மீனு சுபா உருவாகிவிட்டர்கள்” என்று. இப்போது Harshuவுக்கு 1.8 வயது, Rithuவுக்கு 1 வயது.  சண்டை போடுவதும், பாசத்தை கொட்டுவதுமாக மாறி மாறி இருப்பார்கள். ஆனால் 22 வருடங்களுக்கு பின்னர் உயிருக்கு உயிராக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

என் குடும்ப கதைகளை கேட்கும் என் தோழியர் பலர், நான் ரொம்ப lucky என்று கூறுவர். இப்படி என் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரையும் செதுக்கி செதுக்கி வளர்த்தது என் அம்மா தான். நன்றாக அடி வாங்கி தான் ஒரு நல்ல சிற்பம் உருவாகும் என்று கூறுவார்கள். ஆனால் என் அம்மா அன்பான வார்த்தைகளாலே இப்படி ஒரு குடும்ப சிற்பத்தை உருவாக்கியுள்ளார்கள். Harshu Rithu வளர்ந்தாலும் என் அம்மா அவர்களுக்கு பாட்டியாக இல்லாமல் ஒரு நல்ல சகோதரியாகவே இருப்பார்கள். இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் இருப்பது நல்லதே என்று பலருக்கும் உரைக்கட்டும். இனியாவது பெண் பிள்ளைகள் வேண்டாம் என்ற எண்ணத்தை விட்டு விடட்டும் இந்த சமுதாயம்.

3 thoughts on “தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top