வீட்டில் கண்டிப்பாக தாய் மொழியாம் தமிழை தான் பேச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதிலும் எங்கள் மகளுடன் கண்டிப்பாக தமிழில் தான் பேசுவோம். எப்படியும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள போகிறாள். பிறகெதிற்கு வீட்டில் ஆங்கிலம் பேசி தாய் மொழி தெரியாமல் ஆக்க வேண்டும்?? தமிழ் ஒரு பாடமாக இருக்கும் பள்ளி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியளிக்கும் எங்களுக்கு.
பொதுவாகவே என் மகள் “அம்மா, ‘Chubby cheeks, twinkle twinkle’ வேண்டாமே! ‘தோசை அம்மா, நிலா நிலா, அம்மா இங்கே வா வா’ rhymes போடு” என்று கேட்டு கொண்டிருப்பாள். சமீப காலமாக தமிழ் மீது நாட்டம் மிகுதி ஆகிவிட்டது. இன்று ஒரே நாளில் பத்து முறையாவது இந்த மூன்று பாடல்களையும் கேட்டிருப்பாள். இன்று ஓடி விளையாடு பாப்பா ரொம்பவே பிடித்து விட்டது அவளுக்கு.
என் மகள் தமிழ் பாடல்களை விருப்பத்துடன் கேட்பதும், பார்ப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் ஆசிரியையின் கொள்ளு பேத்தி ஆச்சே!!
