இன்று காலை Columbia Asia மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரை பார்த்த பின்னர் நம்மிடம் Prescription ஐ கொடுக்காமல் Pharmacy இல் மருந்துகளை வாங்கி கொள்ளுங்கள் என்று கணினியை தட்டியவாறு டாக்டர் கூறினார். Pharmacy இல் File number ஐ பார்த்து டோகென் கொடுத்தனர். டோகேன் நம்பர் ஐ டிஜிட்டல் போர்டு இல் டிஸ்ப்ளே பண்ணும வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் 18 வயது மதிக்க தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் கையில் IV line இருந்தது. ஏதோ மருந்து செலுத்தி இருப்பார்கள் போல என்று நினைத்தவாறு என் கவனம் திசை திரும்பியது. அவள் தந்தை Pharmacy இல் டோகேன் கொடுத்தாகிவிட்டது. வெயிட் பண்ண சொன்னார்கள் அன்று கூறியவாறு அமர்ந்தார். அந்த பெண் அவர் சொல்லுவதை கூட கவனிக்காமல் செல் போன் இல் பட பட என டைப் செய்து கொண்டிருந்தாள். அந்த IV line போட்ட கையோடு அப்படி சிரமப்பட்டு டைப் செய்யும் அளவுக்கு என்ன முக்கிய வேலையோ பாவம் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவள் தந்தை அவளிடம் பேசிக்கொண்டிருக்க, அவளோ கொஞ்சம் கூட கவனிக்காமல் மொபைல் display யை பார்த்தவண்ணம் சிரித்து கொண்டிருந்தாள். பின்பு அவள் தந்தை எரிச்சலுடன் உச்சு கொட்டிக்கொண்டிருந்தார். பாவம் அவரால் வேறு என்ன செய்ய முடியும் என்று மனதில் நினைத்து கொண்டேன்.
சிறிது நேரத்தில் இடது கையால் மிகவும் கஷ்டப்பட்டு வலது கையின் மேல் போன் ஐ வைத்து ஏதோ வித்தை காட்டிகொண்டிருக்க, அவள் தந்தை “ஏனாயுத்து ரேஷ்மி”, என்று கேட்க அவளோ கூலாக “நன்கி போட்டோ தகோ பேக்கு” (எனக்கு இதை போட்டோ எடுக்க வேண்டும்) என்றாள். அவள் தந்தை மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். அதே எரிச்சலுடன் “சும்னே இரு” என்றவாறு எழுந்து சென்றார். இவளோ விடா முயற்சியுடன் போட்டோ எடுத்துவிட்டாள். பின்பு மீண்டும் டக் டக் என்று மொபைல் ஐ தட்டி கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரே நிமிடத்தில் அவள் மொபைல் ஒலியெழுப்ப, அவள் “Hey Pradeep, I’m in Columbia Asia re. You know what they have put me on Intravenous injection and I might need another one it seems. So they’ve still kept the IV set over my hand” என்றாள். பின்னர் அவன் என்ன கூறினானோ, இவள் அதற்கு பதிலாக “Oh is it?? You already saw my Facebook pic?? Haven’t you gone to college??” என்று கேட்க, எழுந்து பளார் என்று அரையனும் போல இருந்தது எனக்கு. பின்னர், குணா அங்கு வந்து “மருந்து வாங்கியாச்சு, வா போகலாம்” என்று என்னை அழைக்க, நான் அங்கிருந்து சென்றேன்.
Facebook addiction என்பது இந்த அளவுக்கு மக்களிடையில் பரவி இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. நானும் Facebook user தான். ஆனால் இவ்வளவு அடிமையானதில்லை. பழைய நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளவும், எவ்வளவு தூரமாக இருப்பவர்களையும் இணைப்பது Facebook ஆக இருக்கின்றது என்று எண்ணியிருக்கிறேன். அதற்காக இவ்வளவு addiction மக்களிடையே உள்ளதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இளைஞர்கள் இந்த அளவுக்கு நேரத்தை வீணாக்குவதை பார்க்க பார்க்க, டெக்னாலஜி ஏன் தான் இப்படி வளர்ந்ததோ என்று வருத்தமாக உள்ளது. இந்த நேரத்தை வேறு எவ்வளவோ நல்ல விடயங்களுக்கு உபயோக படுத்தினால் நன்மைகள் பல நடக்கும். மொபைல், லேப்டாப், இன்டர்நெட் ஆகியவை Facebook காக மட்டும் இல்லை. அதை தவிர வலையில் எண்ணற்ற பயனுள்ளவை உள்ளன. அதையும் கொஞ்சம் கவனிங்க இளைஞர்களே!! வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

