சமீபத்தில் என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை என்னை மிகவும்பாதித்தது. அந்த பெண் கருவுற்றிருந்தாள். பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்தவளை பற்றி அவள் கணவரிடம் விசாரித்தேன். அவர் இன்னும் due date க்கு 1 வாரம் இருக்கின்றது என்று கூறினார். ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு நாள், அவரிடம் இருந்து போன் வந்தது. குழந்தை பிறந்துவிட்டது போல என்று ஆவலுடன் பேசினேன். அவரோ குழந்தை இறந்தே பிறந்துவிட்டது என்று கூறினார். மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு. ஏனோ என் மனது அந்த பெண்ணை பற்றியே நினைத்து கொண்டிருந்தது.
அன்று இரவு சொந்த கார பெண் ஒருவரிடம் இதை கூறினேன். உடனே அவர் என்ன குழந்தை என்று கேட்டார். ஆண் குழந்தையாம் என்று கூறினேன். அதற்கு அவர் “அட பாவமே. முதல் வாரிசு இப்படி ஆகிவிட்டதா? அய்யோ பாவம்” என்று கூறினார். ஏனோ எனக்கு அவரிடம் மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் வைத்து விட்டேன். அடுத்த நாள் tailor கடைக்கு சென்றேன். அங்கு அந்த tailor என்னிடம் “ஏனம்மா உன் வீட்டு மாடியில் இருக்கும் _______க்கு குழந்தை இறந்தே பிறந்ததாமே.. அதிலும் ஆண் குழந்தையாமே?? பாவம்” என்று கூறினாள். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் தெரிந்த பெண் ஒருத்தி என்னிடம் வந்து “பாவம் அவள். இப்படி ஆகிவிட்டதே. பெண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. ஆண் குழந்தை இப்படி ஆகிவிட்டதே” என்று கூறி முடிப்பதற்குள் என் கோபம் தலைக்கு ஏறிவிட்டிருந்தது. இருந்த கோபத்தில் “அவர்களே பாவம். குழந்தையை பறிகொடுத்து விட்டார்கள். இதில் ஆண் என்ன பெண் என்ன? பெண்ணாக இருக்கும் நீயே இப்படி சொல்கிறாயே. அப்படியானால் பெண்களாக இருக்கும் நாமும் உயிர் வாழ தகுதியற்றவர்கள்” என்று கூறினேன். அதற்கு அவள் “நான் உலக நியதியை தான் சொன்னேன். இதில் என்ன தப்பு” என்று என்னவோ கீதா உபதேசம் கூறும் கிருஷ்ணர் போல தன்னை நினைத்து கொண்டு உலக நியதி பற்றியெல்லாம் பேசினாள். இப்படி பட்ட ஆட்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம் என்று மனதில் கூறிக்கொண்டேன்.
ஆண், பெண் என்று அதிகம் வித்தியாசம் பார்ப்பது பெண்கள் தான் என்று எண்ணும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. அப்படி நினைக்கும் பெண்கள் முதலில் தத்தம் உயிர்களை மாய்த்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள் மட்டும் உயிர் வாழ்வது எந்த விதத்தில் நியாயம்? இப்படி ஒரு சமுதாயம் இன்றும் இருப்பதை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. என்று தான் திருந்தும் இந்த சமுதாயம்? பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பது வெட்கத்திற்குரியது. அந்த பெண் சொன்னது போல, பலர் இதைதான் உலக நியதியாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.


3 thoughts on “இவர்களெல்லாம் பெண்கள் தானா??”
Anni, These things can’t be removed in an instant. By practise only we will be able to change. We should bring our kids by telling the morals and what is good and what to do… We should teach the younger one so that they will make a good society. But for that everyone should have a mind to bring the change.
very true… Poverty is the one and only reason for all these kind of unhuman activities, people generally think if we have female child we need to spend more in marriage and dowry that is what preventing them from female child. If we eradicate poverty and dowry by literacy then we will live in happy land.
People with education , money and good jobs also feel this way. Somehow i feel people are really intimidated that girls/women are self sufficient, taking their own decision, empowered and sometimes give guys a run for their money. Most people cannot tolerate if a woman is choosy about her job, partners etc. then they blame it on education saying that it has spoilt us, hence we have become arrogant. A lot of people whom i know want women to be under their influence. They cannot tolerate if women differ from their point of view. I guess each of us should put our foot down and say that it wont happen this way, only then people will change.