தங்கமான ராஜா

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

“அவள ஏதும் சொல்லாத. என் அம்மா. என் செல்லம். அழ கூடாது. நீ வா பா. ” என்றவாறு அப்பா அம்மாவை முறைத்து விட்டு என்னை வெளியே கூட்டி சென்றார். என்னை யாரும் ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டார் என் அப்பா. “உலகத்தில் சிறந்த அப்பா என் அப்பா தான்” என்று பலரும் கூறி பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வு பூர்வமாக நான் அதை அனுபவிக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் அப்பா போல யாருக்கும் கிடைப்பது அரிது. ஏன், என் Harshu குட்டிக்கு கூட அப்படி ஒரு அப்பா கிடைக்கவில்லை.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் அப்பா தான் என்னை குளிப்பாட்டி, uniform shoe எல்லாம் அணிவித்து school இல் சென்று விட்டு விடுவார். நான் bike இலிருந்து இறங்க மறுப்பேன். என் அப்பா, “அப்பா எங்கயும் போகல. இந்த வீட்டில் பேப்பர் படிப்பேன் பா”, என்றவுடன் ஸ்கூல்க்குள் நுழைவேன். Sunday ஆனால் முடி வெட்ட போக மாட்டேன். என் அப்பா மடியில் தான் அமர்ந்து முடி வெட்டி கொள்வேன். “குட்டி குடை வேணும்பா” என்றேன். அடுத்த நாள் எழுந்திருக்கும் போது, அப்பா பல் துலக்கி கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் மேஜை மேல் கை காட்டினார். நான் கேட்ட குட்டி குடை அங்கிருந்தது. இப்படி எனக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்.

அம்மாவும் அப்பாவும் எப்போவாவது சண்டை போட்டு கொண்டால், “நீங்க போங்க. நானும் அப்பாவும் வேற வீட்டுக்கு போறோம்” என்று கோபமாக அம்மாவிடம் சொல்வேன். சண்டையில் யார் பக்கம் சரி என்று கூட பார்க்க மாட்டேன். இன்று வரை அப்படித்தான். என் அப்பாவை யார் குறை கூறினாலும் எனக்கு பிடிக்காது.

என் அப்பாவை கேலி செய்து பேசுவோம். அவரும் ரொம்ப jolly ஆகத்தான் எடுத்து கொள்வார். யாராவது “என் அப்பா strict ” என்று கூறினால் ஆச்சரியமாக இருக்கும். அப்பா என்றாலே ஜாலி, friendly இல்லையா?? Guna வை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு. அவர்கள் வீட்டில் அவர் அப்பாவிடம் பேசி பார்த்ததே அதிசயம். என் அப்பா என்னை இன்றும் “Subha குட்டி” என்று தான் கூப்பிடுவார். நான் பெங்களூர் இலும் அப்பா சென்னை இலும் இருந்தாலும், தினமும் போன் பேசுவேன். ஒரு நாள் போன் பேசாவிட்டால் என் நாள் முழுமை அடையாது.

இன்று என் Harshu குட்டியை அப்பா என்னை வளர்த்தது போலவே வளர்க்கிறார். அவள் தாத்தா செல்லம். என் அப்பாவை பார்த்ததும் தூக்க சொல்வாள். நான் அவளை எதாவது சொல்லும் முன்பு என் அப்பா “அவள ஏதும் சொல்லாத..” என்பார். எனக்கே அவளை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இப்போதெல்லாம் அவருக்கு செல்லம் அவள் தானே.

நான் என்றுமே வேறு வீட்டு மருமகள் என்று நினைப்பதில்லை. என் முதல் வீடு என்றால் என் அப்பா வீடு தான். என் முதல் குடும்பம் என்றால் என் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா தான். சமீபத்தில் “அபியும் நானும்” படம் பார்த்தேன். என் அப்பா அதில் வருகின்ற ஆயிரம் பிரகாஷ் ராஜ்களுக்கு சமம்.

சுபா குணா வாக இருக்கும் நான், இன்னும் மனதளவில் சுபா தங்கராஜ் தான். என் பாஸ்போர்ட், ID கார்டு எல்லாவற்றிலும் சுபா தங்கராஜ் என்று தான் என் பெயர் இருக்கிறது. என் மனமும அப்படித்தான்.

பெயரில் மட்டுமல்லாமல் என் அப்பா குணத்திலும் பாசத்திலும் தங்கமான ராஜாதான். எனக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத பரிசு இந்த தங்க, தங்கமான ராஜா தான்.

13 thoughts on “தங்கமான ராஜா”

  1. Good work from my lovable wife. My uncle always deserves this. Even harshu will feel the same in future. I want my wife to continue her blog like this. Hats off to subha.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top