பணம்

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

money

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்”
“பணம் பத்தும் செய்யும்”
“பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே”

என்று பல பொன்மொழிகள் உள்ளன. பணத்தால் பாசத்தை வாங்க முடியுமா? என்றும் சிலர் வாதாடுகின்றனர். பல முறை, இதை பற்றிய சிந்தனை பலருக்கும் மேலோங்கும். இதை கொஞ்சம் ஆராய்ந்தால், நமக்கு உலக நியதி புலப்படாவிட்டலும், சொற்ப விடயங்களாவது புரியுமல்லவா?

பணம் கைநிறைய சம்பாதிக்கும் பலர், என்ன செய்கின்றனர்? செல்வந்தராக இருக்கும் பலர், என்ன செய்கின்றனர்? சொத்துக்கள் பல சேர்கின்றனர். வாழ்க்கை தரம் உயர்கின்றது.

ஒரு வீடு வாங்கினாலும், பத்து வீடுகள் வாங்கினாலும், வாழ்வதற்கு வேண்டியது ஒரே வீடு அல்லவா? மனிதனுக்கு கடைசியில் தேவைப்படுவது ஆறடி இடம் தானே. வண்ண வண்ணமான நான்கு சக்கர வண்டிகள்  இருந்தாலும், கடைசியில் செல்ல போவது ஒரே வாகனத்தில் தானே.

சரி, இதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தானே, என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? இதைப்பற்றி அல்ல, என் யோசனை. என் யோசனை எல்லாம், செல்வந்தர்களை சுற்றி சுற்றி திரியும் மனிதர்களை பற்றியும், அதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் கிட்டுகின்றது என்பதை பற்றியும் தான்.

business woman with lots of money

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி, செல்வந்தர்களிடம் மட்டும் தான் பழகுவார். வசதி குறைவாக உள்ளவர்களை, ஏளனமாக பேசுவதும், வேலை வாங்குவதுமாகவே இருப்பார். அது மட்டுமின்றி, செல்வந்தர்களுக்கு ஓடி ஓடி வேலை செய்வதும், அக்கறையாக விசாரிப்பதையுமே முழு நேர வேலையாக செய்வார். இதனால், அவருக்கு என்ன லாபம் கிடைக்கின்றது என்று ஒன்றுமே புலப்படவில்லை எனக்கு. அந்த செல்வந்தர்கள், இவருக்கு என்ன தத்தம் சொத்துக்களை கொடுக்க போகின்றார்களா?? இதைத்தான், நம்மவர் காக்கா பிடிப்பது என்பார்களோ??

இது போதாதென்று, செல்வந்தர்கள் யாரவது பாடுப்பட்டால், இவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி. நோய் உற்றிருந்து, குணமானவர்களை கூட, “அந்த நோய் அவ்வப்போது எட்டி பார்க்காமல் இருக்காது” என்றும், “இதே போலிருப்பவர் பலர் இறந்திருக்கின்றனர்” என்றும் வாய் கூசாமல் கூறுவார். இதை நேரில் பார்த்த ஒரு முறைதான் புரிந்தது, இவர் செல்வந்தர்களை போற்றுவதற்கும், தூற்றுவதற்கும் காரணம், அவர்களிடமிருக்கும் பணமும், இவரிடமிருக்கும் பொறாமையும் தான் என்று.

எதற்கு மக்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்? அகமொன்றும், புறமொன்றும் பேசுவதற்கு மனம், உடல் எல்லாம் கூச வேண்டாமா?? மனிதர்களாகிய நாம், பிறப்பிற்கு பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், இழுக்கு சேர்க்காமல் இருக்கலாம் அல்லவா? பெரும்பாலும் பெண்கள் தான் இப்படி எல்லாம் பேசுவதும், கணக்கு பார்ப்பதுமாக இருக்கின்றனர். ஆனால்  இப்படிப்பட்ட பெண்களால், பெண் இனத்திற்கே கேவலம் தான். இது மட்டுமின்றி, பெண்கள் என்றாலே, பணத்தை சுற்றி வருவர் என்ற பரவலான கருத்தும் பேசப்படுகின்றது.

wrong

இதற்கு காரணம், ஒரு பக்கம் ஆண்களும் தான். தாயோ, தாரமோ, தமக்கையோ, தோழியோ, யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட குணத்தை பார்த்தால், கண்டிப்பதை விட்டுவிட்டு ஏன் பின்பு புலம்ப வேண்டும்? எல்லா பெண்களும் இப்படிப்பட்டவர்களும் இல்லை, எல்லா ஆண்களும் தியாகிகளும் இல்லை.

மனித இனத்தையே கேவலப்படுத்தும் இச்செயல்களை தட்டிக் கொடுத்து வளர்ப்பதை விட, அவ்வப்போதே  பல்லை தட்டினால் போதும், அவர்கள் அடங்கி விடுவார்கள். அதுவும் முடியவில்லையா? அவர்களை உங்கள் வாழ்விலிருந்து தள்ளி வையுங்கள். தானாக அடங்கி விடுவார்கள்.

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்” – அப்படியானால், பணத்தை பார்த்து வாயை பிளக்கும் மனிதர்கள் உயிரற்ற சவம் தானே??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top