பாச மலர்கள்

Subha Thangaraj

Just a human | Explorer of Transformation | Aspiring coach | Senior Manager - all my writings and views are personal representation only

“அம்மா, எங்கம்மா போறோம்?” அம்மாவிடம் கேட்டேன். “அண்ணனோட ஸ்கூல்லுக்கு. இன்னைக்கு அண்ணன் ஸ்கூல்ல annual டே. நிறைய பாட்டு, டான்ஸ், டிராமா எல்லாம் இருக்கும்.”, அம்மா கூறினார்கள். அப்போது எனக்கு 2.5 வயது. அண்ணன் 6th ஸ்டாண்டர்ட் படித்து வந்தான். “ஐயா ஜாலி” என்றவாறு கிளம்பினேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். பாட்டு, டான்ஸ் எல்லாமே நன்றாகவே இருந்தது. இருந்தாலும் ஆவலாக காத்து கொண்டிருந்தேன், அண்ணன் நடிக்கும் “ஏதோ ஒரு ராஜா கால நாடகத்திற்கு”. நாடகத்தில், அண்ணன் சமையல் காரனாக நடித்தான்.

அண்ணனை மேடையில் பார்த்தவுடன், “அண்ணன், அண்ணன்” என்று கைத்தட்டி கூச்சல் போட்டேன். கதை ஒன்றும் புரியாவிட்டாலும், அண்ணனை மட்டுமே பார்த்து பார்த்து பூரிப்படைந்தேன். என்னுடைய ரஜினி, கமல், எல்லாமே அவன் தான். ஒரு கட்டத்தில், ராஜா “இழுத்து செல்லுங்கள் அவனை” என்று கூற, காவல்காரன் என் அண்ணனை இழுத்து சென்றான். என் அண்ணனோ ” என்னை விட்டு விடுங்கள் மன்னா”, என்று அழ, நான் கீழிருந்து “டேய், என் அண்ணனை விடுங்க டா, என் அண்ணனை விடுங்க டா” என்று அலறினேன். என் அம்மா என்னை சமாதான படுத்த முயற்சிக்க, நான் கேட்காமல் அழுதேன். பக்கத்தில் இருந்த aunties “பாப்பா அது கதை மா” என்று கூற, நான் அதை கண்டு கொள்ளாமல் அழுதேன். என் அண்ணன் அதே வேஷ்டி சட்டை, திரு நீறு பட்டை, கையில் தோசை கரண்டியுடன் வந்ததை பார்த்த பின்னரே அழுகையை நிறுத்தினேன்.

இன்று எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் பெயர் Harshita. என் அண்ணனுக்கும் ஒரு பையன் இருக்கிறான். சிவா குட்டி. எங்கள் வீட்டில் 5 பேர். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, நான். அண்ணன் தங்கைகளாக பிறந்த நாங்கள் சிறு வயதில் எப்படி எல்லாம் இருந்தோம் என்று எண்ணினால், செங்கரும்பை சுவைப்பது போல உள்ளது. என் அம்மாவுக்கும் ஒரு தங்கை, தம்பி. என் அம்மா என் சிறு வயதில் கூறுவார்கள், “என் தம்பி என்றால் எனக்கு உயிர்” என்று. நான் கேலியாக, “நீங்களும், மாமாவும் அவ்வளவு close ஆக இருந்து பார்த்ததில்லையே” என்று கூறுவேன். Harshita வும் அதே போல் நாளை என்னிடம் கூறுவாளோ என்னவோ.

நான் இப்போதும் என் அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன் “அம்மா, நாம முன்ன மாதிரி இருக்க முடியாதா? அந்த 1990s க்கு திரும்ப போக முடியாதா?” என் அம்மா கூறுவார்கள், ” சிறு வயதில் காட்டிக்கொள்ளும் அளவிற்கு பின்பு அன்பையும், பாசத்தையும் வெளி காட்ட முடியாது. ஆனால் அந்த உள்ளன்பு என்றைக்குமே இருக்கும்” என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை. இன்றும் என் அண்ணன் என்றால் எனக்கு உயிர். அவனுக்கும் அப்படிதான். அதனால் தானோ என்னவோ Harshu குட்டி அவள் மாமனை உரித்து வைத்து பிறந்திருக்கிறாள். சமையல் காரனாக நடித்த என் அண்ணன் UK வில் டாக்டர் ஆக இருக்கிறான்.

அண்ணன், தங்கை பாசம் என்றால், “பாச மலர்கள்” சிவாஜி, சாவித்திரி மட்டும் தானா? அது வெறும் நடிப்பு தான். காகித மலர்கள். சுபா-ராஜ்குமார் உண்மையான வாசமுள்ள “பாச மலர்கள்”.

14 thoughts on “பாச மலர்கள்”

  1. Akka

    Pasa mazhargal mulamaga pasathai pugutri enn manam purithu poivitathu……………………………………………………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top