என் மகள் ஹர்ஷுக்கு மொட்டை போடுவதற்காக என் அப்பா வழி குல தெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். முதல் நாளே என் அப்பாவுடைய சொந்த ஊரான கன்னிசேரி புதூருக்கு சென்றுவிட்டோம். என் அப்பா 1970 ஆம் ஆண்டு சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டார். எங்கள் குடும்பத்தினருள் பெரியப்பாக்கள் இருவர் மட்டுமே இப்போது எங்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர். காமராஜர் மாவட்டம் விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த சிறிய கிராமம். முன்பொரு காலத்தில் விவசாய செழுமையுடன் காணப்பட்ட அந்த கிராமம் இப்பொழுது வறட்சியை மட்டுமே பார்க்கிறது. மக்களும் வெவ்வேறு வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். கடும் உழைப்பாளிகளை இங்கே காணலாம்.
சிவகாசிக்கு அருகாமையில் உள்ளதால் பெரும்பாலானோர் சிவகாசிக்கு வேலைக்கு செல்வர். தீ பெட்டி தொழிற்சாலைகளிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் வேலைக்கு செல்பவர்கள் தான் அதிகம். வீடுகளுக்கு வீடு தீ பெட்டி ஒட்டுவதை தொழிலாக செய்பவர்களும் அதிகமாக காணப்படுவர். வருடத்திற்கு ஒரு முறையாவது எங்கள் தாத்தா வாழ்ந்த ஊருக்கு சென்று வருவோம். வீட்டில் உள்ள பெண்களை பார்த்தால், காலையில் சீக்கிரம் எழுந்து சமையல், மற்றும் எல்லா வேலைகளையும் வேகமாக முடித்து விட்டு தீ பெட்டி ஒட்ட ஆரம்பிக்கின்றனர். 100 பெட்டிகள் ஒட்டினால் ஐந்து ரூபாய்கள் கொடுப்பார்களாம். அவர்கள் ஒட்டும் வேகத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது. அவ்வளவு வேகமாக ஒட்டுவர். நம் கண் இமைக்கும் முன்பு குறைந்தது 2 பெட்டிகள் ஒட்டுவர்.
சராசரியாக ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்கு சென்றால் கூட தின சம்பளம் என்று பார்த்தால், ஒரு குடும்பத்திற்கு ஐம்பது ரூபாய்களுக்கு மேல் கிடைப்பது அரியது. நம்மவர் போல் அவர்கள் 6, 7 digit salary எல்லாம் வாங்கவில்லை. நம்மவர் போல் அவர்களுக்கு weekend இல்லை. Mineral water குடிப்பவர்கள் இவர்களில்லை. 3 மைல் நடந்து சென்று ஆற்று தண்ணீரை எடுத்து கொண்டு வருவர். Car களிலோ, Volvo bus களிலோ, aeroplane களிலோ, பயணம் செய்ததும் இல்லை. Shopping mall என்பது எப்படி இருக்கும் என்று கூட இவர்கள் பார்த்ததில்லை. AC Restaurant எல்லாம் அங்கில்லை. அங்கு இருப்பது ரோட்டோரமாக ஒரே ஒரு பரோட்டா கடை மட்டும் தான். இவர்களுக்கும் நமக்கும் இவை மட்டும் வித்தியாசம் இல்லை. இன்னும் நிறைய இருக்கின்றன. சந்தோஷமான வாழ்க்கையும், பல குணாதிசெயங்களும் கூட தான். இவர்களின் முகத்தில் மகிழ்ச்சி எப்போதும் உள்ளது. சிரித்த மலர்ந்த முகத்தோடு எல்லோரிடமும் அன்போடு பேசுகின்றனர். தனக்கு என்ற சுயநல குணத்தோடு இவர்கள் இருப்பதில்லை. உதவி என்று கேட்டால் அவர்களால் முடிந்தவரை உதவுகின்றனர். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அன்பு என்ற பாஷை நன்றாகவே தெரியும்.
எங்கள் ஊர் ஷாப்பிங் மால் இது தான்:
எங்கள் ஊர் court இது தான்:
என் தாத்தா அந்த காலத்தில் (1960s இல்) கட்டி கொடுத்த மருத்துவமனை இன்று ஊராட்சி அலுவலகமாக இயங்கி கொண்டிருப்பதை பார்த்தால் பெருமையாக உள்ளது. என் தாத்தாவை நான் பார்த்ததில்லையே என்ற குறை அவரின் பெருமைகளை கேட்ட பின்னர் எனக்கு அதிகமாகி விட்டது. இந்த பசுமையான நினைவுகளையும், அந்த கிராம மக்களின் எளிமையான வாழ்கையையும் மனதில் அசை போட்டு கொண்டே பெங்களூருக்கு திரும்பினேன்.


4 thoughts on “மண் வாசனை”
Good one papa, with photos as well. Good job
Awesome anni gud…
Great respect to Kannicherry
nice one :):)